Box Layout

HTML Layout
Backgroud Images
Backgroud Pattern
logo

தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம்

Tamilnadu Veterinary Assistant Surgeons Association

( அரசாணை எண் GO Ms No. 968 வளர்ச்சி துறை நாள் 21-05-1924 )

logo
TNVASA |VASA TOWER | TAMILNADU VETERINARY ASSISTANT SURGEONS ASSOCIATION

அன்பார்ந்த கால்நடை மருத்துவ சகோதர சகோதரிகளே


    நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவர்களின் நலனுக்காக 1924-இல் உருவானது தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் .இச்சங்கத்தின் பாரம்பரியத்தை பறைசாற்ற 1991 ஆம் ஆண்டு சங்கத்தின் அன்றைய மாநில நிர்வாகிகளின் முயற்சியால் உறுப்பினர்களின்   ஏகோபித்த ஆதவரோடு   அன்றைய   பொது   செயலாளர் டாக்டர். அ . தண்டபாணி அவர்களால் சென்னை .சூளை ,எண் .21,அஷ்டபுஷம் சாலையில் 2650 சதுர அடியில் நிலம் வாங்கப்பட்டு இன்று வரை நமது சங்க நிர்வாகிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது .


     ஜனவரி 2O14-ல் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க தேர்தலில் புதிய நிர்வாகிகளாக தேர்தெடுக்கப்பட்ட அன்றைய பொது செயலாளர்   டாக்டர் ஐ .பொன்னு பாண்டியன் அவர்கள் தலைமையில் ஆன குழுவின் சீரிய முயற்சியால் சங்க கட்டிடம் கட்டுதலை நிறவேற்றும் பொருட்டும் அதன் பின்னர் மேற்க்கொண்ட கடும் முயற்சியின் காரணமாகவும் பின் நாட்களில் நடைபெற்ற ஒவ்வொரு மாநில செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் வெகு வருடங்களாக நிலுவையில் இருந்த சங்க நிலம் தொடர்பான அனைத்து பூர்வாங்க பணிகளையும் ஒரு வருட காலத்தல முடித்து 23-04-2015 அன்று பூமிபூஜை போடப்பட்டு கட்டிடம் கட்டும் பணி துவக்கப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் நடைபெற்றமாநில செயற்குழு கூட்டத்தில் உறுப்பனர்களின் ஏகோபித்த ஆதரவோடு கட்டிடம் கட்டுவதற்கான நிதியாக ஒவ்வொரு கால்நடை உதவி மருத்துவர்களும் ரூ.1O,OOO- அளிப்பது என தீர்மானிக்கப்பட்டு 11 பேர் அடங்கிய கட்டிடக்குழு அமைக்கப்பட்டது.



கட்டிடக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்


    கட்டிடக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி 2650 சதுர அடியில் மூன்று மாடிகள் கொண்ட சங்க கட்டிடம் கட்டுவது என்றும் அதற்கு VASA TOWER என்று பெயரிடப்பட்டு கைதேர்ந்த கட்டிடம் கட்டும் நிறுவனங்களிடமிருந்து வரைபடம். விலைப்புள்ளிகள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடப்பனியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



VASA TOWER   சிறப்பு   அம்சங்கள் :


    மூன்று மாடிகள் கொண்ட எழில்மிகு வெளித்தோற்றம் கொண்டது .

    தரைத்தளத்தில் அலுவலக அறை மற்றும் 10 கார்கள் , 30 இருசக்கர வாகனங்கள் நிறுத்து, வசதி .

    6  நபர் செல்லக்கூடிய தானியங்கி லிப்ட் வசதி .

    முதல் தளத்தில் முழுதுவமாக வங்கிகள் , கார்பொரேட் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட ஏதுவாக வடிமைக்கப்பட்டுள்ளது .

    2 வது தளத்தில் நட்சத்திர வசதிகள் கொண்ட 6 குளிர்சாதன வசதி மற்றும் 2 குளிர்சாதன வசதி அல்லாத அறைகள் .

    24  மணி நேரம் மின்சார வசதி .

    சுத்திரிக்கப்பட்ட குடிநீர் வசதி .



கால்நடை உதவி மருத்துவர்களுக்காண சிறப்பு வசதிகள்


    கட்டிட நிதி அளிக்கும் கால்நடை உதவி மருத்துவர்கள் மட்டுமே உறுப்பினர்களுக்கான Tarrif Rate ல்தங்கமுடியும்.


    உறுப்பினர்கள் தங்குதவதற்க்கும், அறைகள் தேவைத்தொடர்பான அனைத்து விவரங்களையும் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே தரிந்துக் கொள்வ தோடு onlinebooking வசதியும் TNVASAஇ இணையதளத்தில் ஏற்பாடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது .


     VASA Tower கட்டிடம் கட்டுவதற்காக சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய பங்காக ரூ.1O.OOO/- மற்றும் தங்களின் Pass Port Size போட்டோ அடங்கிய Profile ஆகியவற்றை தங்கள் மாவட்டச் - செயலாளர்கள் மூலம் கொடுத்து அதற்கான இரசீதுகளை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.


    ரூ25.000/- மற்றும் அதற்கு மேல் பணம் வழங்கும் உறுப்பினர்களின் பெயர்கள் VASA TOWER தரைதளத்தில் நிரந்தரமாக அமையவுள்ள கல்வெட்டில் பொறிக்கப்படும்.